Headlines

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுமக்களுடனான கலந்தாய்வு இன்று கொழும்பில்!

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுக் கலந்தாய்வு இன்று (06) கொழும்பில் ஆரம்பமாகும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) காலை 8:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை பொதுமக்களின் வாய்மூலச் சமர்ப்பிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டம் மற்றும் திருத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டம் ஆகியவற்றின் விதிகளுக்கு இணங்க இந்தக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டணத் திருத்தம் நேஷனல் சிஸ்டம் ஓப்பரேட்டர் (Pvt) Ltd (National System Operator (Pvt) Ltd) இனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *