Headlines

இலங்கையில் பரவலாக மழை மற்றும் பலத்த காற்று; சில இடங்களில் இடியுடன் கூடிய மழை: வானிலை தகவல்.

ன்று (30) இலங்கையின் பல பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

மேல், சபரகமுவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

இந்த இடங்களில் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், சபரகமுவா, மத்திய, தென், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *