Headlines

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவி ஷியாமிலா பெரேரா.

தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் தலைவி ஷியாமிலா பெரேரா, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் அரச நிறுவனத்தில் பதவி வகித்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய லொத்தர் சபைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மூன்று அதிகாரிகளை, லொத்தர் சபைக்குள் கடமைகளில் ஈடுபடுத்துவதற்குப் பதிலாக, அப்போதைய அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அலுவலகத்தில் பணியாற்றுவதற்காக நியமித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC) மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *