ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi) ஆகியோர் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரைச் சென்றடைந்துள்ளனர்.
இஸ்லாமாபாத் சென்றடைந்த ஈரானிய தூதுக்குழுவினரை, பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் பல முக்கிய அமைச்சர்கள் நேரில் சென்று அமோகமாக வரவேற்றனர்.
கடந்த வார இறுதியில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அமெரிக்க-ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமாக அமைந்ததாக பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகள் நேற்று தெரிவித்திருந்த நிலையிலேயே, இந்த உயர்மட்ட விஜயம் தற்போது இடம்பெற்றுள்ளது.
இந்த விஜயம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “பாகிஸ்தானும் ஈரானும் வரலாறு, நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய வலுவான சகோதர உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. வெளியுறவு அமைச்சர் அரக்ச்சி மற்றும் ஈரானிய தூதுக்குழுவினரை இஸ்லாமாபாத்திற்கு வரவேற்பதில் பாகிஸ்தான் தலைவர்களும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
