2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில், அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேவுக்கு முன்னரே தெரிந்திருந்ததுடன், அவர் அதில் தீவிரமாகச் சதி செய்துள்ளார் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால பாராளுமன்றத்தில் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய அமைச்சர் விஜயபால, திட்டமிடப்பட்டிருந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வன்முறை மற்றும் தீவிரவாத செயற்பாடுகள் குறித்து முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவருக்கு முழுமையாகத் தெரிந்திருந்ததாகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், இந்தத் கொடூரத் தாக்குதல்கள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தக்கூடிய முக்கியமான தகவல்கள் கசிவதைத் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை சுரேஷ் சல்லே மேற்கொண்டிருந்ததாகவும் அமைச்சர் தனது உரையில் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
