தற்போதைய நவீன சமூகத்தில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள சூழலில், குடும்பக் கட்டமைப்பு மற்றும் மனித உறவுகளுக்கு முன்னுரிமை அளித்து அவற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.
சீதுவை பகுதியில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
திறந்த சந்தைப் பொருளாதாரச் சூழலில் சமூகத்தில் நுகர்வுவாசம் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், சந்தை உருவாக்கும் செயற்கையான ஆசைகளுக்கு அடிமையாகாமல், எமது உண்மையான தேவைகளை இனம் கண்டு வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
பணம் சம்பாதிப்பதை மட்டுமே பிரதான இலக்காகக் கொள்ளாமல், எல்லையற்ற ஆசைகளைக் கட்டுப்படுத்தி, மனநிறைவான மற்றும் அர்த்தமுள்ள வாழ்வை நோக்கிய பயணத்தின் அவசியத்தை அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
