‘தேசம் ஒன்றிணைந்து’ (A Nation United) தேசியத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, பத்து தொன்னுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட முற்போக்கு மீளாய்வுத் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, பொலிஸார் 2,100 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் (ICE) போதைப்பொருள் மற்றும் 1,950 கிலோகிராம் ஹெரோயின் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதுவரை சுமார் 5,800 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவற்றுக்கு மேலதிகமாக, இந்த நடவடிக்கையின் போது 280 கிலோகிராமிற்கும் அதிகமான கொக்கேய்ன் மற்றும் 1.7 மில்லியனுக்கும் அதிகமான போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
