முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த சீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், “சதி” (conspiracy) தொடர்பான குற்றச்சாட்டைத் தொடர முடியாது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரியே அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வழக்கைச் சவாலுக்கு உட்படுத்தி யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த சீராய்வு மனுவைப் பரிசீலித்த நீதியரசர்களான அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
