உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிமித்தம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (18) பரிசீலிக்கவுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டதாக அதா தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது, உண்மைகளை உறுதிப்படுத்துவதற்காக (verification of facts) இந்த மனுவை இன்று அழைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் உத்தரவிட்டார்.
அதன்படி, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலிக்கப்பட உள்ளது.
