Headlines

சற்று முன்: யோஷித ராஜபக்ஷ லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக யோஷித ராஜபக்ஷ இன்று காலை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தார்.

யோஷித ராஜபக்ஷ இலங்கை கடற்படை மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் ராயல் கடற்படை அகாடமியில் சேர்ந்தது தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்தார்.

லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பரந்த விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *