அட்டாவீரகொல்லேவ, கொங்கொல்லேவ பகுதியில் இயங்கும் கைக்குண்டு மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், அட்டாவீரகொல்லேவ பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு கைக்குண்டு, 52 T-56 ரக தோட்டாக்கள் மற்றும் 30 9மி.மீ. தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் 48 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் எனவும், அட்டாவீரகொல்லேவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டாவீரகொல்லேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
