இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றமாக 847 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளன. எனினும், மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றத்தில் 152 மில்லியன் அமெரிக்க டொலர் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்களால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மொத்த பணப்பரிமாற்றம் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 23.2 சதவீத அதிகரிப்பாகும்.
மேலும், குறித்த அறிக்கையில் சுற்றுலாத்துறை வருமானம் தொடர்பான தரவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, 2026 ஜூன் மாதத்தில் இலங்கை சுற்றுலாத்துறையின் மூலம் 151.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுள்ளது. எவ்வாறாயினும், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சுற்றுலாத்துறை வருமானம் 169.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
