Headlines

திறமையான விசாரணை அதிகாரி ஷானி அபேசேகர பிரதி பொலிஸ் மா அதிபராகப் பதவி உயர்வு!

[கொழும்பு]

இலங்கை பொலிஸ் சேவையின் கீர்த்திமிக்க மற்றும் மிகவும் திறமையான விசாரணை அதிகாரியாக அறியப்படும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பிரதி பொலிஸ் மா அதிபராக (DIG) தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் சிபாரிசின் பேரில் இவருக்கு இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) பணியாற்றிய காலத்தில், நாட்டை உலுக்கிய பல முக்கிய மற்றும் சிக்கலான குற்றச் செயல்களைத் திறமையாகக் கையாண்டு, குற்றவாளிகளைக் சட்டத்தின் முன் நிறுத்துவதில் இவர் முக்கிய பங்காற்றியிருந்தார். இவரின் அர்ப்பணிப்புமிக்க சேவையைக் கௌரவிக்கும் வகையிலேயே இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *