ஹோமாகம, கட்டுவன தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவசம் உற்பத்தித் தொழிற்சாலையொன்றில் இன்று (21) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு வருவதுடன், தொழிற்சாலைக்குள் எவரேனும் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்விபத்து இடம்பெற்ற சமயத்தில், தொழிற்சாலைக்குள் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் எவரேனும் உள்ளே சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் தொழிற்சாலையில் இருந்து இதுவரை ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
