கொழும்பு: நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை (MRP) நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இந்த விலைகள் ஒக்டோபர் 21, 2025 முதல் உடனடியாக அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அதிகபட்ச சில்லறை விலைகள் (MRP)
அதன்படி, ஒரு கிலோகிராம் இறக்குமதி அரிசிக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலைகள் பின்வருமாறு:
- பச்சை அரிசி (Raw Rice): ரூ. 210
- நாடு (Nadu): ரூ. 220
- சம்பா (Samba): ரூ. 230
- பொன்னி சம்பா (கீரி சம்பாவுக்கு சமம்): ரூ. 240
- கீரி பொன்னி / பால் பொன்னி: ரூ. 255
