கொழும்பு: இன்று (நவம்பர் 03) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய பகுதிகளில் சீரான வானிலை
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம் எனவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
