Headlines

நேரடி, மறைமுக வரி விகிதம் 60:40 ஆக மாற்றம்: ஜனாதிபதி அறிவிப்பு

(பி.ப. 02:45) நாட்டின் வரி வருவாய் கட்டமைப்பில் ஒரு அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவரும் முக்கிய இலக்கு ஒன்றையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சபையில் அறிவித்தார்.

“தற்போது ஏற்றத்தாழ்வுடன் காணப்படும் நேரடி வரி (Direct Tax) மற்றும் மறைமுக வரி (Indirect Tax) விகிதங்களை, 60:40 என்ற விகிதத்திற்கு கொண்டு வர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையானது, மறைமுக வரிகளால் (பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகள்) சாதாரண மக்கள் மீது விழும் சுமையைக் குறைத்து, நேரடி வரிகள் (வருமான வரி போன்றவை) மூலம் அதிக வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து அரச வருவாயை அதிகமாக்கும் ஒரு முற்போக்கான வரி முறைமையை நோக்கிய நகர்வாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *