Headlines

இலங்கையில் தங்க விலை பாரிய வீழ்ச்சி: சவரனுக்கு ரூ.10,000 குறைந்தது!

கொழும்பு, நவம்பர் 15: இலங்கையில் தங்கத்தின் விலை நேற்று (நவம்பர் 14) உடன் ஒப்பிடுகையில் ரூ. 10,000 குறைந்துள்ளது.

அதன்படி, இன்று காலை (நவம்பர் 15) கொழும்பு புறக்கோட்டை தங்கச் சந்தையில் 22 கரட் தங்கப் பவுணின் விலை நேற்று ரூ. 315,500 ஆக இருந்த நிலையில், இன்று ரூ. 305,200 ஆகக் குறைந்துள்ளது.

இதேவேளை, நேற்று ரூ. 340,000 ஆக இருந்த 24 கரட் தங்கப் பவுணின் விலை இன்று ரூ. 330,000 ஆகக் குறைந்துள்ளதாக புறக்கோட்டை தங்கச் சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *