2027 ஆம் கல்வி ஆண்டுக்காக அரச பாடசாலைகளில் தரம் 1 இற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான உத்தியோகபூர்வ சுற்றறிக்கையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய 25/2026 ஆம் இலக்க சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இந்த சுற்றறிக்கையை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும். மாணவர் சேர்க்கை தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
