ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் தற்போதைய சுகாதார நிலை குறித்த முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை வழங்கினார். குறிப்பாக, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேக்கு மேலதிக மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்து தேவைப்படுகின்றதா என்பது குறித்த துல்லியமான தகவல்களை வழங்குமாறும் நீதிமன்றம் குறித்த வைத்தியசாலை நிர்வாகத்திடம் கோரியுள்ளது.
அவரின் தற்போதைய உடல்நிலை, வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் எதிர்காலத்தில் தேவைப்படும் மருத்துவ நடவடிக்கைகள் குறித்த தெளிவான மருத்துவ அறிக்கையின் அடிப்படையிலேயே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.
