(இரண்டாம் இணைப்பு)
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாவை லஞ்சமாக வழங்கிய குற்றச்சாட்டில் இன்று காலை கைது செய்யப்பட்ட கிரிஷ் குழுமத்தின் (Krrish Group) முன்னாள் நிறைவேற்று பணிப்பாளரும் பிரபல வர்த்தக பிரமுகருமான ஜானகி சிறிவர்தன, எதிர்வரும் அக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (24) காலை லஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி குறித்த விபரங்கள்:
கிரிஷ் குழுமத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளரும் பிரபல வர்த்தக பிரமுகருமான ஜானகி சிறிவர்தன, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு மூன்று சந்தர்ப்பங்களில் 70 மில்லியன் ரூபாவை லஞ்சமாக வழங்கிய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
