Headlines

ஆளும் கட்சி எம்.பி.க்கள் சம்பளத்தைக் கட்சி நிதிக்கு வழங்குவது ஊழல்”: இலஞ்ச ஆணைக்குழுவில் உதய கம்மன்பில முறைப்பாடு!

கொழும்பு: ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்களது மாதாந்த சம்பளத்தை கட்சி நிதிக்கு மாற்றுவதன் மூலம், பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதாக, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான முறைப்பாடு ஒன்றை, அவர் இன்று (29) காலை இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் (CIABOC) சமர்ப்பித்தார். முறைப்பாட்டை அளித்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், “159 அரசாங்க எம்.பி.க்கள், மாதந்தோறும் மொத்தமாக 30 மில்லியன் ரூபாய்க்கும் (3 கோடி) அதிகமான நிதியை ஒரு கட்சி நிதிக்கு மாற்றுகிறார்கள். அந்தக் கட்சி நிதியானது, தொலைபேசிக் கட்டணங்கள், எரிபொருள் செலவுகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தும் செயலாகும்,” என்றார். பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளைத் தமது சொந்த விருப்பின் பேரில் பயன்படுத்த முடியாது எனத் தெரிவித்த அவர், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு ஆணைக்குழுவைக் கேட்டுக்கொண்டார். இந்த முறைப்பாடு, அரசியல் அரங்கில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *