அவுஸ்திரேலியாவில் ‘லுலு ஹைப்பர்மார்க்கெட்’ கிளைகளைத் தொடங்க பிரதமர் அல்பானீஸ் அழைப்பு!
புதுடெல்லி: அவுஸ்திரேலியாவில், தமது லுலு ஹைப்பர்மார்க்கெட் கிளைகளைத் தொடங்குமாறு, அதன் தலைவர் யூசுப் அலிக்கு, அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.
புது டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவின் பன்முகக் கலாச்சார சமூகத்திற்கு, லுலு நிறுவனத்தின் சர்வதேசப் தயாரிப்புகள் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எனப் பிரதமர் அல்பானீஸ் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த லுலு குழுமத் தலைவர் யூசுப் அலி, இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதுடன், சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காகத் தமது குழு விரைவில் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யும் எனவும் உறுதியளித்தார். இந்த நடவடிக்கை, சர்வதேச வர்த்தக உறவுகளில் ஒரு புதிய படியாகும்.
