Headlines

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணி: கொழும்பின் பல இடங்களில் நாளை தண்ணீர் இருக்காது.

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நாளை (04) 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்.

பாதிக்கப்படும் பகுதிகள்:

  • கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரை
  • பத்தரமுல்லை, பெலவத்தை
  • ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட
  •  ஸ்ரீ ஜெயவர்தனபுர, கோட்டே, ராஜகிரிய
  • மிரிஹான, மாதிவெல
  • நுகேகொட,, நாவல
  • கொலன்னாவ, ஐ.டி.எச் (IDH), கொட்டிக்காவத்தை, அங்கொடை
  • வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை
  • கடுவெலை
  • மகரகாம, பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) விடுத்துள்ள அறிக்கையின்படி, முல்லேரியா கட்டமைப்பு துணை மின்நிலையத்தில் (Grid Substation) மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் தற்காலிகமாகத் துண்டிக்கப்படவுள்ளமையே இந்த நீர்வெட்டிற்குக் காரணமாகும்.

இதுதவிர, தெஹிவளை நீர் உந்தி நிலையத்திலும் (Water Pumping Station) மற்றும் மாளிகாவத்தை எலி ஹவுஸ் நீர் உந்தி நிலையத்திலும் மின்சார அமைப்பு மேம்படுத்தும் பணிகளும் நாளை மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே, நீர்வெட்டினால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *