Headlines

களுபோவில அவிஷ்க”வின் போதைப்பொருள் வலைப்பின்னலை இயக்கியவர் கைது!

“களுபோவில அவிஷ்க” என அறியப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினர் மற்றும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரின் உள்ளூர் போதைப்பொருள் வலைப்பின்னலை இயக்கியதாகக் கருதப்படும் நபர், ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) பாரிய குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கொஹுவல, களுபோவில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 2 கிலோகிராம் 10 கிராம் ஐஸ் போதைப்பொருள், 504 கிராம் ஹெரோயின், மின்னணுத் தராசு, இரண்டு ரப்பர் முத்திரைகள் மற்றும் இரண்டு மொபைல் போன்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் மற்றும் போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *