கொழும்பின் பல பகுதிகளில் இன்று (03) இரவு 8.00 மணி முதல் நாளை (04) இரவு 8.00 மணி வரை 24 மணி நேர நீர் விநியோகத் தடையை அமுல்படுத்தவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
நீர் விநியோகத்தின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நுகேகொடை, கொஹுவல, தெஹிவளை, கல்கிஸ்ஸை, ரத்மலானை, மொறட்டுவை, ரவத்தாவத்தை, சொய்சாபுர, அங்குலானை, இண்டிபெத்த, கட்டுபெத்த, கல்தேமுல்ல, முகத்துவாரம் (Mutwal), கொரலவெல்ல, எகொட உயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.
மேலும், சேத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடல்ல, பேங்க் ஜங்ஷன் வீதி, டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லாக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, ஆஸ்பத்திரி வீதிச் சுற்றுவட்டம், ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளிலும் இந்த நீர் விநியோகத் தடை அமுலாகும்.
எனவே, இந்த 24 மணி நேர நீர் விநியோகத் தடை அமுலாகும் காலப்பகுதியில், குறித்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நீரைச் மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
