Headlines

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று (04) 12 மணிநேர நீர்வெட்டினை அறிவித்துள்ளது.

சபையின் அறிவிப்பின்படி, இந்த நீர் விநியோகத் தடையானது இன்று காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை அமுலில் இருக்கும்.

நீர் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:

  • கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையான பகுதிகள்
  • பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட
  • ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல
  • நுகேகொட, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச் (IDH), கொட்டிக்காவத்தை, அங்கொடை
  • வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, கடுவெலை, மகரகாம, பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை
  • தெஹிவளை, கல்கிஸ்சை, இரத்மலானை, மொறட்டுவை, இராவதாவத்தை மற்றும் சொய்சாபுர

நீர்வெட்டிற்கான காரணம்:

முல்லேரியா கட்டமைப்பு துணை மின்நிலையத்தில் (Mulleriyawa Grid Substation) மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகளுக்கு வசதியாக, அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் தற்காலிகமாகத் துண்டிக்கப்படவுள்ளமையே இந்த நீர்வெட்டிற்கான காரணமாகும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, தெஹிவளை நீர் உந்தி நிலையம் மற்றும் மாளிகாவத்தை எலி ஹவுஸ் உந்தி நிலையம் ஆகியவற்றிலும் இன்று மின்சார அமைப்பை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *