Headlines

மக்களுக்கு நற்செய்தி: 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு விலை ரூ.300 இனால் குறைப்பு.

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் (Litro Gas Lanka Limited) இன்று (03) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் உள்நாட்டு லிட்ரோ சமையல் எரிவாயு (LP gas) சிலிண்டர்களின் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

இதன்படி, எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைப் பட்டியல் பின்வருமாறு:

  • 12.5 கிலோ கிராம் சிலிண்டர்: 300 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 4,465 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • 5 கிலோ கிராம் சிலிண்டர்: 118 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 1,792 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • 2.3 கிலோ கிராம் சிலிண்டர்: 55 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 835 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு அமைவாக, அதன் நன்மைகளை நேரடியாக நுகர்வோருக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் சவால்கள் காணப்பட்டாலும், வினைத்திறனான மற்றும் வலுவான முகாமைத்துவத்தின் ஊடாக இலங்கை நுகர்வோரைப் பாதுகாப்பதிலும், சர்வதேச சந்தையிலிருந்து பெறப்படும் நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்குவதிலும் லிட்ரோ நிறுவனம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நுகர்வோரின் நம்பிக்கை மற்றும் சேவையின் தரம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி, நாடளாவிய ரீதியில் நியாயமான விலையில் தடையற்ற சமையல் எரிவாயு விநியோகத்தைப் பேணுவதற்குத் தொடர்ந்து செயற்படுவதாகவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *