Headlines

சுவிஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில், மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நான்கு குற்றவாளிகளின் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று (06.05.2026) உறுதிப்படுத்தியது.

தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம், மகாலிங்கம் சசிகுமார் என்றழைக்கப்படும் ‘சுவிஸ் குமார்’ உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்யத் தீர்மானித்தது.

யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்யாவின் படுகொலை தொடர்பில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் ‘ட்ரயல்-அட்-பார்’ (Trial-at-Bar) தீர்ப்பாயத்தினால் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *