Headlines

ஞானசார தேரர் நாளை வரை விளக்கமறியலில்!

பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் பூஜ்ய கலபொட அத்தே ஞானசார தேரர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஞானசார தேரரை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) அதிகாரிகளினால் தேரர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *