பாலங்கொடை, பின்னவல, எல்லாரவப் பகுதியைச் சேர்ந்த காணாமல் போன 17 வயதுடைய மூன்று பள்ளி மாணவிகளும் திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பாலங்கொடையிலுள்ள முன்னணிப் பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் இந்த மூன்று மாணவிகளும், கடந்த 31ஆம் திகதியன்று டுவெய்சன் (Tuition) வகுப்புக்குச் செல்வதாக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். எனினும், அவர்கள் வீடு திரும்பாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், உடனடியாக பாலங்கொடைப் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பெற்றோரின் புகாரின் அடிப்படையில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், தீவிர தேடுதலுக்குப் பின்னர் மாணவிகள் திருகோணமலையில் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
