அந்தர் அயன மண்டல ஒடுங்கல் வலயத்தின் (ITCZ) செல்வாக்கு மற்றும் நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த மட்டத் தளம்பல் நிலை காரணமாக, இன்று (06) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேவேளை, சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
