Headlines

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: சுரேஷ் சல்லேயின் கைதுக்கு எதிரான மனு நாளை மீண்டும் அழைப்பு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுடன் இணைந்ததாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே தாக்கல் செய்த ரீட் மனு, இன்று (25) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், நீதிமன்றத்தில் விரிவான சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, இந்த மனுவை நாளை (28) மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது என அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

மனு மீதான மேலதிக விசாரணையை நடத்துவதற்கான திகதியை நீதிமன்றம் நாளை நிர்ணயிக்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *