பௌத்த தேரர்களுக்கு இடையில் ஒழுக்கத்தைப் பேணுவதை உறுதி செய்வதற்காக, அவசியமான சட்டங்கள் உடனடியாக இயற்றப்படும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தறை, திஹகொடவில் உள்ள மிதெல்லவல விகாரையில் இன்று (27) நடைபெற்ற அரச வெசாக் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு இணங்க, 1931 ஆம் ஆண்டின் விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கும், பௌத்த தேரர்களின் ஒழுக்காற்று விடயங்களைக் கையாள்வதற்கான அதிகாரத்தைக் கொண்ட ‘தர்மாதிகரண்ய’ ஒன்றை மீண்டும் நிறுவுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
