தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் திருவிழா தொடங்குகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என இந்த முறை களம் காணும் நான்கு முனைப் போட்டி, வரலாற்றிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 5.6 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் குரலைப் பதிவு செய்யக் காத்திருக்க, காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது.
