Headlines

அரச நிதி துஷ்பிரயோக குற்றச்சாட்டு: ரணில், சமனுக்கு எதிராக ஜூலை 8ல் முன்னேற்ற அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிச் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராக அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான நடைமுறை விசாரணைகள் குறித்து முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (29) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட்டது.

குறித்த முன்னேற்ற அறிக்கையை ஜூலை 8ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் சிஐடிக்கு பணிப்புரை வழங்கியது.

அரசத் தரப்பு சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், அந்தத் தேதிக்கு முன் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

மேலும், இந்த முறைப்பாடு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி கலாநிதி மைத்திரி விக்ரமசிங்கவையும் சந்தேகநபராக பெயரிட அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக திலீப பீரிஸ் தெரிவித்தார்.

அரச வளங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

புலனாய்வு முன்னேற்ற அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மேலதிக நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *