இன்று (29) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முக்கிய தகவல்கள்:
- பலத்த மழை: வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
- காலை நேர வானிலை: தெற்கு மாகாணத்தில் காலை வேளையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
- மூடுபனி: மத்திய, சபரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் காலை வேளையில் சில இடங்களில் மூடுபனி நிலையை எதிர்பார்க்கலாம்.
பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்: இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
