Headlines

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம்: பாராளுமன்ற விவாதம் நிறைவு, இன்று மாலை தீர்மானமிக்க வாக்கெடுப்பு!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்றங்கள் கட்டமைப்பு (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் இரண்டாம் வாசிப்பு மீதான பாராளுமன்ற விவாதத்தின் இறுதி நாள் இன்றாகும் (25).

இதற்கமைய, குறித்த இரண்டு முக்கிய சட்டமூலங்கள் மீதான வாக்களிப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான பாராளுமன்ற விவாதம் நேற்று (24) ஆரம்பமானது.

குறித்த சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன கடந்த செவ்வாய்க்கிழமை (22) பாராளுமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என்றும், பாராளுமன்றத்தில் விசேட மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மை பலத்துடன் அதை நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதேவேளை, நீதிமன்றங்கள் கட்டமைப்பு (திருத்தச்) சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகவும் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன பாராளுமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *