Headlines

8,990 பாடசாலைகளில் 1.5 மில்லியன் பிள்ளைகளுக்கு மதிய உணவு; 33,600 மில்லியன் ஒதுக்கீடு – பிரதமர் ஹரினி.

பாடசாலை போஷாக்குத் திட்டம் தற்போது 8,990 பாடசாலைகளில் 1.5 மில்லியன் பிள்ளைகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற தேசிய பாடசாலை போஷாக்கு மாநாடு 2026 இல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலை மதிய உணவுத் திட்டத்திற்காக இந்த ஆண்டு 33,600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *