Headlines

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமனம்!

கொழும்பு: மேல் மாகாண வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய அசோக தர்மசேன, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB) புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பதவி வகித்த ஓஷான் ஹெவவிதாரண, கேகாலை பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன், மேலும் 13 பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் 10 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் தெரிவித்தார். இந்த புதிய நியமனங்கள் உடனடியாக அமுலுக்கு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *