Headlines

இன்றைய வானிலை அறிக்கை: நாட்டின் பல பாகங்களில் மழை மற்றும் பலத்த காற்று

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (01) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின்படி, மேல் மற்றும் சபரகமுவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராகச் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. இதற்கமைய, இன்று (01) நண்பகல் 12.10 மணியளவில் கற்பிட்டி, தலாவ, சின்ஹரகம, கல்கடவல, நாச்சதூவ, படிகாரமடுவ, கோமரங்கல்ல மற்றும் வெருகல் ஆகிய இடங்களுக்கு மேலாகச் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *