Headlines

அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்து SLPP பேரணி: மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அநுராதபுரத்தில் கோலாகலம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) “ஜனசதந” (Janasatana) பிரமாண்ட மக்கள் பேரணி இன்று (12) அநுராதபுரத்தில் பெருந்திரளான ஆதரவாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்ட இந்த பேரணியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரணி நடைபெறும் இடத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் திரண்டுள்ள நிலையில், கட்சியின் அமைப்பாளர்களும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகளும் உரையாற்றி வருகின்றனர்.

இந்தக் கூட்டத்தின் ஆரம்ப உரையை மிகிந்தலை தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளர் நிகழ்த்தினார். இதன்போது, தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கையாளுதல், விவசாயிகள் சந்தித்து வரும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காணத் தவறியமை மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்துள்ளமை தொடர்பில் அவர் கடுமையாக விமர்சித்து உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *