உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 15 பேருக்கும் தலா 220 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை (Rigorous Imprisonment) விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட நீதியரசர்கள் குழாம் (Colombo High Court Special Trial-at-Bar) இன்று வழங்கியுள்ளது. முன்னதாக இந்த வழக்கில் நௌபர் மௌலவி உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்ட நிலையில், அவர்களுக்கான தண்டனை விபரமே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
