Headlines

இலங்கைக்கு 3 டன் காசநோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்கியது இந்தியா!

இந்தியா இலங்கைக்கு 3 டன் காசநோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்கியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்த மருந்துக் தொகுதி நேற்று (28) இந்திய விமானப்படையின் விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.

எக்ஸ் (முன்பு ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவில், இலங்கையின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை ஆதரிப்பதில் இந்தியா தொடர்ந்து உறுதியாக உள்ளது என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ‘டிட்வா’ சூறாவளியால் சேதமடைந்த 14 பாலங்களைப் புனரமைப்பதற்கு ஆதரவளிப்பதற்காக இலங்கை மற்றும் சீனா அரசாங்கங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கும், இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும் இடையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *