இன்று (04) அதிகாலை அஹூன்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வெஹர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 74 வயதுடைய முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கல்வெஹர, அஹூன்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த காயமடைந்த முதியவர் சிகிச்சைக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் ஜன்னல் வழியாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பிஸ்டல் (Pistol) பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக அஹூன்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
