Headlines

முதல் T20 போட்டியில் தென்னாபிரிக்கா த்ரில் வெற்றி

கார்டிஃப்: இங்கிலாந்துக்கு எதிரான, மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது T20 போட்டியில், தென்னாபிரிக்க அணி டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டேர்ன் (DLS) முறைப்படி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என தென்னாபிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.

கார்டிஃபில் நேற்று (10) நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, 7.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 97 ஓட்டங்களைக் குவித்தது. பின்னர், மழை காரணமாக இங்கிலாந்தின் வெற்றி இலக்கு 5 ஓவர்களில் 69 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அணி 5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 54 ஓட்டங்களை மாத்திரமே எடுத்துத் தோல்வியடைந்தது.

தென்னாபிரிக்கா சார்பில் மார்கோ ஜேன்சன் மற்றும் கோர்பின் போஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இங்கிலாந்து தரப்பில், ஜோஸ் பட்லர் மாத்திரம் 25 ஓட்டங்களைப் பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *