Headlines

களுத்துறை – நாகொட வீதி உணவகத்தில் இன்று காலை பயங்கர துப்பாக்கிச்சூடு: உரிமையாளர் பலி; மனைவி படுகாயம்!

களுத்துறை – நாகொட வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (09) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உணவகத்தின் உரிமையாளர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த உணவக உரிமையாளரின் மனைவி, களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

T-56 ரக துப்பாக்கிப் பிரயோகம்:

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தாக்குதல்தாரிகள் T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தச் கொடூரத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை மற்றும் நாகொட பொலிஸார் இணைந்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் என்ன? அல்லது ஏதேனும் பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான மோதலா? என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *