Headlines

லியோனார்டோ டிகாப்ரியோவின் ‘One Battle After Another’: 97% பாசிட்டிவ் விமர்சனங்களுடன் இன்று வெளியீடு!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ நடித்துள்ள ‘One Battle After Another’ என்ற புதிய ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம், இன்று (25) திரையரங்குகளில் வெளியாகிறது. பிரபல இயக்குனர் போல் தாமஸ் ஆண்டர்சன் இயக்கியுள்ள இப்படம், விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மனைவி திடீரென காணாமல் போன பிறகு, தனது மகளைத் தனியாக வளர்க்கும் ஒரு தந்தையாக டிகாப்ரியோ இப்படத்தில் நடித்துள்ளார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு, எதிரி ஒருவர் மகளைக் கடத்த, அவரை மீட்கப் போராடுவதே கதை. “இப்படம் மனிதநேயம், உலகில் நிலவும் துருவமுனைப்பு மற்றும் தீவிரவாதம் குறித்த ஒரு நையாண்டி,” என டிகாப்ரியோ கூறியுள்ளார். படத்தின் விமர்சனங்களை ஒருங்கிணைக்கும் Rotten Tomatoes தளத்தில், இப்படம் 97% நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. குறிப்பாக, இயக்குனர் போல் தாமஸ் ஆண்டர்சனின் இயக்கம் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *