நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81வது அமர்வில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அணு ஆயுதங்களை முற்றாக ஒழிக்க வேண்டும் என வலுவான அழைப்பை விடுத்துள்ளார்.
அணு ஆயுதப் பரவல் மற்றும் உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் பதற்றங்கள் தொடர்பான கவலைகளுக்கு மத்தியிலேயே அமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அணு ஆயுதக் குறைப்பிற்கான சர்வதேச முயற்சிகளுக்கு இலங்கை தொடர்ந்தும் தனது பூரண ஆதரவை வழங்கும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அத்துடன், அணு ஆயுதங்களற்ற பாதுகாப்பான உலகை அடைவதற்கு அனைத்து நாடுகளின் கூட்டுச் செயற்பாடு மிகவும் அவசியம் என்பதையும் அவர் இதன்போது வலியுறுத்திக் கூறினார்.
