நாட்டில் எவ்வித தடங்கலும் இன்றி தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை முன்னெடுப்பதற்கு எவ்வித தடைகளும் இல்லை என சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதியளித்துள்ளார்.
நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நாட்டில் மீண்டும் மின்தடை அமுல்படுத்தப்படலாம் என வெளியாகும் செய்திகளை முற்றாக நிராகரித்த அமைச்சர் கருணாதிலக்க, அவ்வாறான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் சுட்டிக்காட்டினார். போதியளவான நிலக்கரி இருப்புக்கள் உள்ளதால், பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றி மின்சாரம் வழங்கப்படும் எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
